சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை 68 ஆயிரத்தை தொட்டது.

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்த நிலையில் ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை நேற்று முன்தினம் (ஏப்.12) ரூ.70 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி, தங்கத்தின் விலை நேற்று முன்தினம் (ஏப்.12) கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,770க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.70,160 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடைய, நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,755க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.70,040 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று (ஏப்.15) மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.8,720-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.69,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.