இன்று ரூ.640 உயர்ந்த தங்கம்! ஒரு சவரன் 55,000-ஐ நெருங்குவதால் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து சவரன் ரூ. 54,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய…

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து சவரன் ரூ. 54,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருகிறது.\

இதையும் படியுங்கள் : “சோடா பாட்டில் இல்ல… வாக்குகள் தான் பறக்கும்…” – அமரன் பட பாடலை பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்!

ஆனால் இம்மாத தொடக்கத்திலிருந்தே சென்னையில் ஆபரணத் தங்கங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 6,725க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 80 உயர்ந்து ரூ. 6805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ. 54,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து,  வெள்ளி விலை ஒரு ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.90.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.