சுபமுகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் கடந்த வாரத்தை காட்டிலும் இன்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, மல்லிகை பூவின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் பூ வியாபாரிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ, இன்று கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மல்லிகை பூவின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் மூன்று மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளது. இதேபோல், முல்லை பூ கிலோ ரூ.1,000-க்கும், செண்டு பூ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பன்னீர் ரோஜா கிலோ ரூ.220-க்கும், நாட்டு ரோஜா கிலோ ரூ.300-க்கும் விற்பனையாகிறது.
மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அதிகாலை நேரத்திலேயே பல்வேறு வகையான பூக்கள் கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:
மதுரை மல்லி கிலோ ரூ.1700,
பிச்சி ரூ.1000, முல்லை ரூ.900,
செவ்வந்தி ரூ.250,
சம்பங்கி ரூ.300,
செண்டு மல்லி ரூ.80,
கனகாம்பரம் ரூ.1000,
ரோஸ் ரூ.300,
பட்டன் ரோஸ் ரூ.250,
பன்னீர் ரோஸ் ரூ.350,
கோழிக்கொண்டை ரூ.80,
அரளி ரூ.250,
மரிக்கொழுந்து ரூ.150,
தாமரை (ஒன்றுக்கு) ரூ.50 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




