4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு செல்கிறேன் : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

ஜெயிலர்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை புறப்பட்டு சென்றார். திரைப்படங்களில் பிசியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு ஓய்வு கிடைக்கும் போது இமயமலை செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.…

ஜெயிலர்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை புறப்பட்டு சென்றார்.

திரைப்படங்களில் பிசியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு ஓய்வு கிடைக்கும் போது இமயமலை செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் அவர் இமயமலை செல்வது வழக்கம் . கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக அவர் கடந்த 4 ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லவில்லை.

இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த ரவி, மோகன்லால், மிரானா, யோகி பாபு, சிவராஜ்குமார், விநாயகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை பிரதான திரையரங்குகளில் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லவில்லை என்றும், தற்போது செல்வதாகவும் கூறினார். ஜெயிலர் திரைப்படம் எப்படி வந்திருக்கு என்ற செய்தியாளரின் கேள்விக்கு, நீங்கள் பார்த்து விட்டு சொல்லுங்கள் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.