நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘பௌசி’. ஹனு ராகவபுடி இயக்கும் இப்படத்தில் மிதுன் சக்ரவர்த்தி, ஜெயபிரதா மற்றும் அனுபம்கேர் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். மேலும் இமான்வி இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இந்த நிலையில் இத்திரைபடத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் ‘ஃபௌஸி’ படப்பிடிப்புத் தளத்தின் படங்களைப் பரப்பும் சமூக ஊடக கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழுவினர் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக வெளிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஃபௌஸி திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து கசிந்த படங்களை சில கணக்குகள் பரப்பி வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதை ஒரு கடுமையான எச்சரிக்கையாகக் கருதுங்கள் – ஃபௌஸி’ படப்பிடிப்புத் தளத்தின் படங்களைப் பரப்பும் சமூக ஊடக்கணக்குகள் மீது புகாரளிக்கப்படும். மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தேவையான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இந்தக் கசிவுகள், நாங்கள் கவனமாக உருவாக்கி வரும் அனுபவத்தைச் சீர்குலைக்கின்றன. வெள்ளித்திரையில் வரவிருப்பது இதைவிட மிகப் பெரியதாகவும், காத்திருப்புக்குத் தகுதியானதாகவும் இருக்கும். கசிந்த புகைப்படங்களை பகிர்வதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்படப்பட்டுள்ளது.







