தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் திமுகவை இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, பேசிய ஜி.கே.வாசன், போடிநாயக்கனூர் தொகுதிக்கு மட்டுமன்றி தமிழகம் முழுவதும் நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் ஓ.பன்னீர் செல்வம் என தெரிவித்தார்.
10 ஆண்டுகளாக அதிமுக செய்துவரும் நலத்திட்டங்களை திமுக தடுக்க நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என சாடிய ஜி.கே.வாசன், தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்ல அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.







