தமிழகத்தில் உள்ள மூன்று இலட்சத்து 50 ஆயிரம் அரசு காலி பணியிடங்களை தமிழக இளைஞர்களுக்கே வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில், ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தருமபுரி நான்கு சாலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்று வரை உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
தற்போது இரண்டாம் கட்ட கொரோனா அலை வீசி வருவதால், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.







