முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இளம்பெண்கள் செல்போனில் பேசுவதை கண்காணிக்க வேண்டும்: பெண்கள் ஆணைய உறுப்பினர்!

பெண்கள் செல்போனில் பேசுவதை கண்காணிக்க வேண்டுமென  உத்தர பிரதேச பெண்கள் ஆணைய உறுப்பினர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகளவில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஹத்ராஸில் 19 வயது பட்டியலின இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.  

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் பெண்கள் ஆணைய உறுப்பினரான மீனா குமாரி, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அலிகார் மற்றும் பரேலி பகுதியில் நடந்த பாலியல் வன்புணர்வு சம்பவங்களை மேற்கோள்காட்டி, இதுபோன்றவை தொடர்கதையாகி வருகிறதே என செய்தியாளர்கள் அவரிடம்  கேள்வி எழுப்பினர்.  

அதற்கு பதிலளித்த மீனா குமாரி, இளம்பெண்கள் செல்போனில் பேசுவதை கண்காணிக்க வேண்டும். அவர்கள் செல்போனை ஆண்களுடன் பேசுவதற்கும், அவர்களுடன் ஓடிப்போவதற்கும் அதனை பயன்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், மகள்கள் கவனக்குறைவாக இருப்பதற்கு தாய்தான் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார். 

பாலின சமத்துவம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பெண்களே காரணம் என்பது போல அமைந்துள்ளது அவரின் பேச்சு. அதுவும் பெண்களின் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்டுள்ள பெண்கள் ஆணையத்தின் உறுப்பினரே இவ்வாறு பேசியது சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. 

Advertisement:

Related posts

மத்திய பிரதேசத்தில் மறைக்கப்படுகிறதா கொரோனா மரணங்கள்?

Ezhilarasan

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்றம் கண்டனம்!

Karthick

”அப்பா நலமுடன் உற்சாகமாக இருக்கிறார்”- மகள்கள் அறிக்கை!

Jayapriya