முக்கியச் செய்திகள் தமிழகம்

பாலியல் வன்கொடுமைக்கு பலியான சிறுமி; கடும் நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமை செய்ததால் சிறுமி உயிரை மாய்த்து கொண்ட  சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் கடத்தி, கட்டாயத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதால் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமி நஞ்சு குடித்து உயிரை மாய்த்துக்  கொண்டுள்ளார். இந்நிகழ்வு மிகவும் வேதனை அளிக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிறுமியை கடத்திய மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை படம் பிடித்தும் மிரட்டியுள்ளார். சிறுமி காவல்துறையினரால் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் மிரட்டல் தொடர்ந்தது தான் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனித நேயமற்றவை. காட்டுமிராண்டித் தனமானவை. படித்து, வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டிய சிறுமிகளை கடத்தி, கட்டாயத் திருமணம் செய்யும் காட்டுமிராண்டித் தனத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும் என வேண்டும்.

சிறுமியை கடத்திச் சென்று சீரழித்து உயிரிழப்புக்கு ஆளாக்கிய மணிகண்டனும், அவருக்கு துணையாக இருந்தவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்; சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனஅறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெளியானது கேங்ஸ்டா பாடல்; கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

G SaravanaKumar

ம.பொ.சி-க்கு ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும்-சீமான் வலியுறுத்தல்

G SaravanaKumar

ஆவடியில் போட்டியிட விரும்புகிறேன்: அமைச்சர் பாண்டியராஜன் விருப்பம்!

Jayapriya