முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரியில் 10% இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த கூடாது -எதிர்க்கட்சி தலைவர் சிவா

புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பில் EWS 10 சதவீத இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த கூடாது என வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவிப்பு.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பு சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்காக (EWS) 10% சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதலியார்பேட்டை பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதில், குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணியிடங்களுக்கு இட ஒதுக்கீடு அமுலாக்க வேண்டும். வேலைவாய்ப்பு அறிவிப்பாணைகளில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டும். புதுச்சேரியில் பணியாளர் தேர்வாணையம் அமைக்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அரசு வேளை வாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்காக (EWS) 10% சதவீத இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி வரும் 18ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாகக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சாம்பல் புதன் : சேலத்தில் சிறப்பு பிரார்த்தனை

Halley Karthik

உலக கோப்பை கால்பந்து; அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்த ஜெர்மனி அணி

G SaravanaKumar

மீட்பரின் போதனைகள் மனித குலத்திற்கு வழிக்காட்டின: வைகோ ஈஸ்டர் தின வாழ்த்து

Halley Karthik