29.4 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிறுமியை மாடு முட்டிய விவகாரம் – மாடுகளின் உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

சிறுமியை மாடு முட்டிய விவகாரம் தொடர்பாக மாடுகள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரோட்டரி கிளப் சார்பில் பள்ளியையும் அதை சார்ந்த சுற்றுப்புறத்தையும்
தூய்மையாக வைக்க மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை
தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களிடம் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை தூய்மையாக வைப்பது எப்படி
என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது..

” சென்னை மாநகரத்தை உலக தரத்துக்கு உயர்த்த , மெகா சிட்டி திட்டங்கள் போன்ற
பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டாலும் மக்கள் பங்களிப்போடு வரக்கூடிய
திட்டங்கள் தான் தொடர்ந்து வெற்றிகரமாக இருக்கும் என்ற நோக்கத்தில் எப்போதும்
ரோட்டரி கிளப் பல்வேறு வகைகளில் கை கொடுக்கும்.

ஏற்கனவே நமது மாநகராட்சியில் தினமும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை சேர்கிறது. அதை நாம் சுத்தப்படுத்தி கொண்டு இருக்கிறோம். ஆனால் அந்தந்த பகுதிகளில் தூய்மை என்பது குப்பைகளை அப்புறப் படுத்துவது மட்டுமின்றி அதை
பிரிப்பது, மறு சுழற்சி செய்வது, ஏற்கனவே தேங்கிய குப்பைகளை தரம் பிரிப்பது,
பயோமைனிங் முறையில் அப்புறப்படுத்துவது போன்றவை அடங்கும். அந்த வகையில்
இவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது.


நூறு கிலோவுக்கு மேல் குப்பை போடுபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கிறோம். குப்பையை பராமரிப்பதில்  முழுமையான வெற்றி வேண்டும் என்றால் எல்லாருடைய பங்களிப்பும் அவசியம். சென்னையில் மாடு மற்றும் மாடுகளின் உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அடைக்க இரண்டு இடங்கள் மட்டுமே உள்ள நிலையில் மேலும் 5 மாட்டு தொழுவங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

அரும்பாக்கம் சிறுமியை  மாடு முட்டியதற்கு பிறகு சுற்றி திரிந்த 126 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாடுகளை பிடிக்கும் போது கவனமாக, குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் மாடுகளை கவனமாக பிடிக்கிறோம். மாட்டையும் கன்றையும் பிரிக்க மாட்டோம். பால் கொடுக்கும் மாடுகளை பால் கறப்பதற்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram