‘குஷி’ இசை நிகழ்ச்சி; ரசிகர்களை கவர்ந்த சமந்தா, விஜய் தேவரகொண்டா நடனம் வைரல்.!

‘குஷி’ இசை நிகழ்ச்சியில் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து காதல் நடனம் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர்…

‘குஷி’ இசை நிகழ்ச்சியில் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து காதல் நடனம் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. இவருடன் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குஷி’. இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை, ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார்.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரோஜா நீதான் எனத் தொடங்கும் பாடல் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அண்மையில் இந்த படத்தின் டைட்டில் பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் இந்த படத்தின் டிரெய்லர் கடந்த 9-ம் தேதி அன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் கதையை மையமாக கொண்டு வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகை சமந்தாவும், நடிகர் விஜய் தேவரக்கொண்டாவும் நேர்காணல்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு படத்தினை விளம்பரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், குஷி படத்தின் மியூசிக்கல் கான்சர்ட் சுதந்திர தின மான நேற்று ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது. இதில் நடிகை சமந்தா, நடிகர் விஜய் தேவரகொண்டா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோர் மேடையில் ஒன்றாக தோன்றி அவர்களின் ரசிகர்களுக்காக குஷி பட பாடலுக்கு நடனமாடி மேடையிலேயே லைவாக ரொமான்ஸ் செய்து அங்கு வந்திருந்த பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக மாற்றினர். தவிர்க்க முடியாத இந்த ஜோடிகளின் கெமிஸ்ட்ரி அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. தற்போது இந்த ஜோடிகளின் அந்த நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.