கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் சட்டமன்ற அலுவலகம் முன்பு அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவிகள் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டார்.
அங்கு கட்டப்பட்டு இருந்த மாடுகளுக்கு அகத்திகீரையை கொடுத்தும், பாரம்பரிய முறைப்படி உரலில் உலக்கையை கொண்டு நெல்குத்தியும் துர்கா ஸ்டாலின் மகிழ்ந்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்த முதலமைச்சரும் அவரது மனைவியும், பொதுமக்கள் உருவாக்கிய பொங்கலையும் சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும் 800 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
டொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக அரசு ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் மீது தீர்வு காணப்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் தமிழர்களின் தொன்மையை விளக்கும் கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.







