சிம்பு பத்து தல படத்தின் டீசரை பார்த்துள்ளதாகவும், ஏஆர் ரகுமான் சம்பவத்திற்கு ரெடியாகிவிடுங்கள் எனவும் டிவிட் செய்துள்ளார்.
பத்து தல 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘மஃப்டி’ யின் ரீம்மேக் தான் இப்படம்.
இதில் சிம்பு கேங்ஸ்டராகவும் கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.இந்த படத்தின் முதல் பாதி கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய நார்த்தனை வைத்தே எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பு இடம்பெறும் இரண்டாம் பாதி முழுவதும் ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்குகிறார்.
பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி வந்த இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று இப்படித்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பத்து தல படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. அதைதொடர்ந்து, 03.03.23 அன்று பத்து தல படத்திலிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு சார்பில் டிவிட்டரில் ஒரு போஸ்டரை வெளியிட்டப்பட்டது.
https://twitter.com/SilambarasanTR_/status/1631322860588511233?s=20
இந்நிலையி சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பத்து தல படத்தின் டீசரை பார்த்துள்ளதாகவும், ஏஆர் ரகுமான் சம்பவ்த்திற்கு ரெடியாகிவிடுங்கள் எனவும் டிவிட் செய்துள்ளார். டீசர் இன்று மாலை 5:31 மணிக்கு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.







