பான்-இந்தியா நடிகர்களில் ஒருவர் யாஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 ஆகிய படங்கள் இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து நடிகர் யாஷ், மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். கேவிஎன் புரோடக்ஷன்ஸ் மற்றும் நடிகர் யாஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘டாக்ஸிக்’ என பெயரிடப்பட்டுள்ளது.
டாக்ஸிக் திரைப்படமானது அடுத்தாண்டு மார்ச் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹியூமா குரேஷியின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் எலிசபெத் என்னும் கதாப்பாத்திரத்தில் ஹியூமா குரேஷி நடிப்பதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.








