விளையாட்டு

அரையிறுதியில் நுழைந்தார் ஜோகோவிச்; துபாய் ATP டென்னிஸ் தொடரில் அசத்தல் ஆட்டம்

துபாய் ATP டென்னிஸ் தொடர் அரையிறுதி சுற்றில் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் நுழைந்தார் .

 

 

துபாயில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி பிப்ரிவரி 28ம் தேதி தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், தகுதி நிலை வீரர் தாமஸ் மசாக்கை (செக் குடியரசு) எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை காட்டிய தாமஸ் மசாக் இரண்டாவது செட்டை  6-3 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஜோகோவிச் போராடி 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார். இறுதியில், ஜோகோவிச் 6-3, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.பின்னர், ஏடிபி டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், நெதர்லாந்து வீரர் கிரிக்ஸ்பூர் உடன் மோதினார். அதிரடியாக விளையாடிய ஜோகோவிச், அடுத்தடுத்து இரண்டு செட்டுகளையும் 6-2, 6-3 என கைப்பற்றி 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தொடர்ந்து, உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், காலிறுதி ஆட்டத்தில் போலந்தின் ஹியூபர்ட் உடன் மோதினார்.  இதில் ஜோகோவிச் முதல் இரண்டு செட்களையும் 6-3, ,7-5 என கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் நுழைந்தார் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாக். பயிற்சியாளர் பதவியில் இருந்து மிஸ்பா, வக்கார் யூனிஸ் திடீர் விலகல்

EZHILARASAN D

நீரஜ் சோப்ராவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Web Editor

இந்திய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

Gayathri Venkatesan