ஆடி கட்டழகு கருவாச்சி என தொடங்கும் கள்வன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பிவி ஷங்கர் இயக்கியுள்ள கள்வன் என்ற புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா மற்றும் பிரபல இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் பிவி ஷங்கர் மற்றும் ரமேஷ் ஐயப்பன் இணைந்து கள்வன் படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவையும் இயக்குனரே கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில்லர் மற்றும் நகைச்சுவை களத்தில் இப்படமாக இப்படம் இயக்கப்பட்டுள்ளது.
நாயகனாக நடிப்பது மட்டுமின்றி, ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையும் அமைக்கிறார். அவருக்கு ஜோடியாக இவானா நடிக்த்துள்ளார். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரியின் ஜி டில்லி பாபு கள்வன் படத்தை தயாரித்துள்ளார். படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துவிட்ட நிலையில், இப்படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
https://twitter.com/gvprakash/status/1631309017095229441?s=20
இதற்கிடையே, நடிகர் சூர்யாவால் கள்வன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நள்ள வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆடி கட்டழகு கருவாச்சி என தொடங்கும் இப்பாடல் குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.







