முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

நேபாளத்தில் பொதுத்தேர்தல் : உற்று நோக்கும் அண்டை நாடுகள்

நேபாளத்தில் இன்று நடைபெறும் பொதுத்தேர்தல் அண்டை நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த தேர்தலில் 1 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 22 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 2 ஆயிரத்து 412 வேட்பாளர்களில் 867 பேர் சுயேட்சைகள். முக்கிய அரசியல் கட்சிகளில், சிபிஎன்-யுஎம்எல் 141 வேட்பாளர்களையும், நேபாள காங்கிரஸ் 91 வேட்பாளர்களையும், சிபிஎன்-மாவோயிஸ்ட் சென்டர் 46 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன.

மூன்று கோடி மக்கள் தொகையை கொண்ட நேபாளம், தற்போது கடுமையான பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை உயர்வால், பணவீக்கம் எட்டு சதவீகித்தற்கு மேல் உள்ளது. இந்த சூழல் நடைபெறும் இந்த பொதுத்தேர்தல், நேபாளத்திற்கு மட்டுமின்றி, அண்டை நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

 

– ரா.தங்கபாண்டியன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கணினி மயமாகும் அரசு அலுவலகங்கள்: அமைச்சர் மனோ தங்கராஜ்

Arivazhagan Chinnasamy

பிரதமர் வேட்பாளரா மம்தா பானர்ஜி?

Halley Karthik

சபரிமலை அன்னதானத்தில் முறைகேடு: முன்னாள் அதிகாரி கைது

Halley Karthik