முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி20 போட்டி; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின் உள்பட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், 20 ஓவர் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், ஒருநாள் போட்டி அணிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக செயல்பட உள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் கடந்தத 18ம் தேதி நடைபெற இருந்த நிலையில் மழையினால் ஆட்டம் கைவிடப்பட்டது. முதல் போட்டியை போல் இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மவுன்ட் மாங்கானுவில் இன்று மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா தற்போது பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் போட்டியில் 20 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 11-ல் இந்தியாவும், 9-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணியிலும் சிறந்த வீரர்கள் பலர் இருப்பதால் அதிரடியை எதிர்பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மகாராஷ்டிராவில் சட்டசபை கலைக்கப்படும் நிலைமை-சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத்

Web Editor

திமுக-வை விமர்சித்த காமராஜர் – நினைவு கூர்ந்த அமைச்சர் நாசர்

Dinesh A

திமுகவை ஆதரித்தது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

EZHILARASAN D