‘பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது’ – ஓபிஎஸ்

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு வழங்கியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை இபிஎஸ் தரப்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு ஓபிஎஸ்…

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு வழங்கியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை இபிஎஸ் தரப்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு ஓபிஎஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், திட்டமிட்டபடி பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறும் என அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆவடி மாநகர காவல் ஆணையாளருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 23-06.20222 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவைத் தள்ளி வைக்க வேண்டும் எனத் தான் இணை ஒருங்கிணைப்பாருக்குக் கடிதம் எழுதி இருந்ததாகவும், அந்த கடிதத்தைக் கூட்டம் நடக்க இருக்கக் கூடிய மண்டபத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘யார் இந்த யஷ்வந்த் சின்ஹா?’

மேலும், ஒற்றைத்தலைமை விவகாரத்தில், கட்சி தொண்டர்கள் கோபமுற்று இருப்பதாகவும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், தொண்டர்களை அமைதி காக்கும்படி ட்விட்டரில் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ள அவர், கழக சட்டதிட்ட விதிகளுக்கு மாறாகத் திருவள்ளூர் மாவட்டக் கழக செயலாளர் பா.பெஜமின் நிகழ்வுக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால், கழக சட்ட நடவடிக்கை எடுக்கக் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையில், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, பென்ஜமின் கோரிய பாதுகாப்புக்கு அனுமதி மறுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.