முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

வெளியானது வசூல் மன்னனின் ‘வாரிசு’ first look!

தமிழ் சினிமாவின் தளபதியான விஜயின் அடுத்த படத்திற்கான தலைப்பு வெளியாகி இணையத்தை பற்ற வைக்க தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்பை போல் 100 நாட்கள், 200 நாட்கள் என்று நாட்களை வைத்து படங்களுடைய வெற்றி கொண்டாடப்படுவதில்லை. 100 கோடி வசூல், 300 கோடி வசூல் என படத்தின் கலெக்‌ஷனை வைத்தே வெற்றியை அளவிடுவது வாடிக்கையாகிவிட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில் அஜித், விஜயின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் இரண்டு தரப்பு ரசிகர்களுமே இணையத்தில் வசூல் ரீதியான வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். அதில் பொதுவாக விஜயின் கையே ஓங்கியிருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினியை தொடர்ந்து தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாகவே வலம் வந்தார் விஜய். இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான.. இல்லை இல்லை மிகவும் மோசமான விமர்சனங்களுடன் வசூலிலும் பின்தங்கியது. கே.ஜி.எஃப்-வுடன் போட்டி போடும் என்று பார்த்தால் அஜித்தின் வலிமை அளவுக்குதான் போட்டி போட்டது பீஸ்ட்.

இந்நிலையில் உலகநாயகனின் விக்ரம் படம் வந்து அனைத்து ரெக்கார்டுகளை சுக்குநூறாக நொறுக்கியது. once upon a time there lived a ghost என்பது போல் மீண்டும் மார்கெட்டின் உச்செத்திற்கு சென்று இளம் நடிகர்களுக்கே tough கொடுத்தார் கமல்.

இந்நிலையில் புகழ்பெற்ற தெலுங்கு சினிமா இயக்குநரான வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படமானது தமிழோடு, தெலுங்கிலும் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் விஜயின் அடுத்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பிடப்பட்டு the boss returns எனவும் குறிப்பிட்டு அதன் first look-ஐ வெளியிட்டுள்ளது படக்குழு. நாளை விஜயின் 48வது பிறந்தநாள் என்பதால் ‘ பண்டிகையை கொண்டாடுங்களே’ என்பது போல் இணையத்தை அதகளம் செய்ய தொடங்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள். once upon a time there lived a box office boss.. and the boss returns எனக் கூறி இணையத்தை கொளுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதிய தடுப்பணைகள் கட்ட முதலமைச்சர் உத்தரவு

Halley Karthik

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபர்..தமிழிசை சவுந்தரராஜனிடம் மலேசியா பெண் எம்எல்ஏ புகார்

Saravana Kumar

தமிழர் பகுதியில் தஞ்சமடைந்த மகிந்த ராஜபக்ச

Ezhilarasan