திருச்செங்கோட்டில் ஒன்றரை ஆண்டுகளாக சூதாட்டம் நடத்தும் கும்பல் – பணத்தை இழந்து வரும் நபர்கள்!

திருச்செங்கோட்டில் ஒன்றரை ஆண்டுகளாக சூதாட்டம் நடத்தி வரும் கும்பலால் பல நபர்கள் தங்களது பொருட்கள் மற்றும் பணங்களை இழந்து வருகிறது. நாமக்கல்  திருச்செங்கோட்டில் அர்த்தநாரீசுவரர் கோயில் மலையின் அடிவாரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. …

திருச்செங்கோட்டில் ஒன்றரை ஆண்டுகளாக சூதாட்டம் நடத்தி வரும் கும்பலால் பல நபர்கள் தங்களது பொருட்கள் மற்றும் பணங்களை இழந்து வருகிறது.
நாமக்கல்  திருச்செங்கோட்டில் அர்த்தநாரீசுவரர் கோயில் மலையின் அடிவாரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.  இங்கு ஒரு குடியிருப்பில் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் ஆய்வு நடத்தியது.இந்த ஆய்வில் தினமும் இரவு 11.30 மணியிலிருந்து அதிகாலை 2 மணி வரை சூதாட்டம் நடைபெறுகிறது எனவும், இந்த சூதாட்டம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது எனவும்,  இதனை திருச்செங்கோட்டையை சேர்ந்த தாமு, சக்தி, மோகன் ஆகியோர் முன்னின்று நடத்தி வருவதும் தெரியவந்தது.
இதில் பல மாவட்டத்திலிருந்து வரும் நபர்கள் விளையாடி 1000 ரூபாயிலிருந்து பல லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளனர். வாகனம், நகைகள் அடமானம் வைத்து விளையாடி வருவார்கள் இதில் பணத்தையும் இழந்துள்ளனர்.  இச்சூதாட்டம் காவல்துறை அனுமதியுடனே நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் அவர்கள் விசாரணை நடத்தி சூதாட்டம் கும்பல்களை கைது செய்தால் மட்டுமே சூதாட்டத்தை நிறுத்த முடியும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.