முக்கியச் செய்திகள் தமிழகம்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்கிய முதலமைச்சர்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

கடந்த 2018- ம் ஆண்டு வீசிய கஜா புயலில், நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பெருமளவில் பாதிப்படைந்தது. இதில் சேதமுற்ற மேற்கு பிராந்தியங்கரை, பெரிய கோவில் பத்து, கண்ணரிந்தன் கட்டளை ஆகிய ஊர்களை ஒய்.எம்.சி.ஏ சென்னை அமைப்பு சார்பாக தத்தெடுத்தது.

இதனையடுத்து அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 109 வீடுகள் மற்றும் ஆயிரம் பேர் அமரக்கூடிய சமூகநல மண்டபம் ஒன்றையும் இவ்வமைப்பு கட்டிக்கொடுத்துள்ளது. அந்த வீடுகளையும், சமூகநல மண்டபத்தையும் தலைமைச்செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்ததுடன், பயனாளிகளிடமும் ஒப்படைத்தார்.

Advertisement:

Related posts

மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Saravana Kumar

பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தேர்தல் பரப்புரை!

Halley karthi

சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு: உதவிப் பேராசிரியர் பரபரப்பு குற்றச்சாட்டு

Halley karthi