தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டுக்கு குறைந்த அளவு தடுப்பூசிகளே வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களுக்கு வழங்கிய தடுப்பூசிகளின் அளவை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும், மக்கள் தொகை அடிப்படையில் போதுமான அளவு தடுப்பூசி வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாகவும், 2 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் மருத்துவமனனிகளுக்கு தற்போது வழங்கும் அளவை குறைக்க வேண்டும் எனவும், மாநிலத்தின் ஒதுக்கீட்டில் 90 சதவீத தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.







