கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும், 3வது வாரமாக ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நேற்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணிவரை 31 மணிநேர முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முழுஊரடங்கையொட்டி மாநிலம முழுவதும் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள், 320 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைத்து,தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களை தடுத்து நிறுத்திடும் போலீசார், அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர்.







