கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை 3-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 9 மற்றும் 16-ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, 3-வது ஞாயிற்றுக்கிழமையாக நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து நாளைய தினம், ஏற்கனவே முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முழுஊரடங்கின் போது தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்காக அனைத்து மாவட்ட ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் ஆட்டோக்கள் இயக்கப்படும் என்றும், முழு ஊரடங்கின்போது செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Advertisement: