டெண்டர் முறைகேடு செய்ததாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் முழு அளவில் ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை பத்து வாரங்களில் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து எஸ்பி.வேலுமணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுமீது இப்போது தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அண்மைச் செய்தி: நகைக்கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
தமிழ்நாடு அரசன் பதில் மனுவில், உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை எஸ்.பி.வேலுமணி தெரிவிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு எந்தவிதமான சலுகைகளையும் வழங்க கூடாது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் முழுமையான ஆதாரங்களை திரட்டியிருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








