அரூரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைவீதியில் ஞானவேல் என்பவர் நகைக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், கடையின் பூட்டை உடைத்து உள்ளே வைத்திருந்த மூன்று லட்சம் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
மேலும், அதே பகுதியில் இருந்த இரண்டு நகைக்கடைகளிலும் மர்ம நபர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இது தொடர்பாக சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணி குறைவாக இருப்பதால்தான் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் அரூர் பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அண்மைச் செய்தி: இலங்கையில் முழு ஊரடங்கு; பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம்
கொள்ளையடிக்க முயன்ற இரண்டு கடைகளிலும் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








