‘நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது’- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஜீலை 17-ஆம் தேதி, நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில் பாப்பா குறிச்சி பகுதிக்கு, புதிய பேருந்து வழித்தட சேவையை,…

ஜீலை 17-ஆம் தேதி, நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சியில் பாப்பா குறிச்சி பகுதிக்கு, புதிய பேருந்து வழித்தட சேவையை, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பேருந்து சேவை இல்லாத வழித்தடங்களுக்கு விரைவில் பேருந்து சேவை தொடங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனியார் பள்ளிகள், தங்களின் வாகனங்களை பராமரித்து இயக்க வேண்டும் என அவர் கூறினார்.

அண்மைச் செய்தி: நகைக்கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

மேலும் படிக்கட்டு பயணத்தினை மாணவர்கள் ஃபேஷனாக நினைக்கக் கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார். பின்னர், தமிழ்நாடு அரசு சார்பில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான, சட்டப் போராட்டமும், தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.