முக்கியச் செய்திகள் தமிழகம்

70% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்- முதலமைச்சர்

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் இதுவரை 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கோவை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்கள் ஸ்ரீநிதி – கெளசிக் தேவ் ஆகியோருக்கு மாலை எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்து வாழ்த்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்த வாய்ப்பு கிடைத்தற்க்கு நன்றி. கலைஞர் இருந்திருந்தால் இந்த திருமணத்தைக் தலைமையேற்றி நடத்தி வைத்திருப்பார். இந்த மாவட்டத்தைக் கம்பீரமாக மாற்றிய பெருமை பொங்கலூர் பழனிச்சாமிக்கு உண்டு.

சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகி, திமுகவில் வந்து இணைய வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அப்போதிலிருந்து இணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். சட்டமன்றத்தில் மதியழகன் தொகுதிக்கு. தேவையானவற்றை கேட்டு பெறுகின்ற முறையைக் பார்த்தால் சிறப்பாக இருக்கும். இது ஒரு சீர்த்திருத்தம் மற்றும் தமிழ் திருமணமாக இந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது என்றார்.

1967ம் ஆண்டு அண்ணா முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் சீர்த்திருத்த திருமணம் சட்டப்படி செல்லும் என்கிற தீர்மானத்தை நிறைவேற்றினார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் 70 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள 30 சதவீதம் விரைவில் நிறைவேற்றுவோம்.

பொதுமக்கள் என்னிடம் மனு கொடுத்துவிட்டு நன்றி என்று சொல்கின்றனர். நான் அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே அவர்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்துள்ளோம். இது தான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எலான் மஸ்க்கின் அரிய புகைப்படங்களை ரூ.1.3 கோடிக்கு விற்ற முன்னாள் காதலி!

EZHILARASAN D

செந்தமிழ் பேச நிறைய கஷ்டப்பட்டேன் – நடிகை த்ரிஷா

EZHILARASAN D

காதலுக்கு உதவி கேட்ட இளைஞருக்கு புனே காவல் ஆணையரின் சாமர்த்திய பதில்!

Gayathri Venkatesan