செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது அண்ணா பல்கழைக்கழகம்

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பை சென்னை அண்ணா பல்கழைக்கழகம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து நிலவிவந்த கொரோனா சூழ்நிலை காரணமக அண்ணா பல்கழைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.…

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பை சென்னை அண்ணா பல்கழைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து நிலவிவந்த கொரோனா சூழ்நிலை காரணமக அண்ணா பல்கழைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், இறுதியாண்டு பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 3-வது வாரத்தில் தொடங்கும் எனவும் நேரடி முறையில் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பொறியியல் கல்லூரிகளும், செமஸ்டர் தேர்வை நேரடி முறையில் எழுத்துத் தேர்வாக நடத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுகளையும் நேரடி முறையில் நடத்த வேண்டும் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.