சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனிஷ்வர் நாத் பண்டாரி வரும் திங்கட்கிழமை பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனிஷ்வர் நாத் பண்டாரி வரும் 22-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக…

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனிஷ்வர் நாத் பண்டாரி வரும் 22-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு இருந்தார்.

இதனையடுத்து அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனிஷ்வர் நாத் பண்டாரி வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.