தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர்… #Andhra அரசின் அசத்தல் அறிவிப்பு!

ஆந்திர மாநில அரசு சார்பில், பயனாளர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை இலவசமாக சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின்…

Free Gas Cylinder , Diwali ,Andhra Govt, ,

ஆந்திர மாநில அரசு சார்பில், பயனாளர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை இலவசமாக சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் அளித்த முக்கியமான ஆறு வாக்குறுதிகளில் ஒன்றான மூன்று இலவச சிலிண்டர் திட்டம் அமைந்திருந்தது. இந்நிலையில், அமராவதியில் இன்று (அக்.23) ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர்கள் திட்டத்தை தீபாவளி முதல் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக, பொது வழங்கல் துறை அமைச்சர் மனோகர் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : கவனம் பெறும் #Vettaiyan சப்வே சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோ!

இந்த திட்டத்துக்கு மாநில அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ.2,684 கோடி ஒதுக்கப்படும். ஒவ்வொரு நான்கு மாதத்துக்கும் ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும். பணம் செலுத்தி சிலிண்டர் பெற்றுக் கொள்ள வேண்டும். சிலிண்டர் வாங்கிய 48 மணி நேரத்துக்குள் பணம் வங்கியில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பயனாளர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை இலவசமாக சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.