விவசாயத்திற்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 50 ஆயிரமாவது பயனாளிக்கு ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 50,000 விவசாயிகளுக்கு அரசாணை வழங்கப்படும் என்று முன்னதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி கடந்த நவம்பர் 11-ம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் 20,000 விவசாயிகள் ஆணையை பெற்றனர். தொடர்ந்து மீதமுள்ள 30,000 விவசாயிகளுக்கு படிப்படியாக ஆணை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின்இணைப்புக்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.