21 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 21 காவல்துறை உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சிலை கடத்தல்…

தமிழ்நாட்டில் 21 காவல்துறை உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில குற்றப்பதிவுப் பணியக காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக ரோஹித் நாதன் ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய டிஜிபி கருணாசாகர், காவலர் நலன் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சாம்சன், தென்காசி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட எஸ்பி செந்தில்குமாரை, அமலாக்கத்துறை எஸ்பியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்ட எஸ்பியாக ஆஷிஸ் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சிவகங்கை எஸ்பியாக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அன்கிட் ஜெயின், ஸ்ரேயா குப்தா உள்ளிட்ட 7 ஏஎஸ்பிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.