கரூரில் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவிகள் 402
பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை மேயர் கவிதா கணேசன் வழங்கினார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்டது காந்தி கிராமம். இந்த பகுதியில் புனித தெரசா
பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் கலந்து கொண்டு 402
மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மிதிவண்டி பெற்ற மாணவிகள் புதிய மிதி வண்டிகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
இதில் தனியார் மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணி, மாநகராட்சி
மண்டல குழு தலைவர் ராஜா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள்
பலர் கலந்து கொண்டனர்.
—-ஸ்ரீ.மரகதம்







