நெல்லை மாவட்டம் பணகுடி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பணக்குடி அருகேயுள்ள சிவகாமிபுரம் வனப் பகுதியில், சிலர் வேட்டை நாய்கள் வைத்து முயல் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், திருநெல்வேலி – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் ரோந்து சென்றபோது சந்தேகம் ஏற்படும் படியாக வேட்டை நாய்களுடன் நான்கு பேர் இருந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்யும்போது, அவர்கள் முயல் வேட்டையில் ஈடுபட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் அவர்களிடன் இருந்த முயல்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், பணகுடி அருகே உள்ள அழகியநம்பிபுரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் வேட்டை நாயின் உதவியுடன் முயலை வேட்டையாடியதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். வனஉயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு 9-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால் முயல் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேருக்கும் தலா ரூ 5000/- வீதம், வனத்துறை அதிகாரிகள் மொத்தம் ரூ.20000 அபராதம் விதித்தனர்.