முக்கியச் செய்திகள் தமிழகம்

வரவிருக்கும் பட்ஜெட் விவசாயிகள் நலன் சார்ந்த பட்ஜெட்டாக இருக்கும் – அமைச்சர் MRK. பன்னீர்செல்வம்

வேளாண்மை துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளப்படி, இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் பட்ஜெட்டாக வரவிருக்கும் பட்ஜெட் இருக்கும் என புதுக்கோட்டையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் குடுமியான் மலையில் உள்ள ஸ்டாமின் பயிற்சி மையத்தை ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியால் பராமரிக்கப்படாத அனைத்தும் இந்த ஆட்சியில் சரி செய்யப்பட்டு வேளாண்மைத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்து 60 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், வேளாண்மைத்துறை முழுமையாக முடுக்கி விடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும், காவிரி பாயும் பகுதிகள் அனைத்தையும் டெல்டா பகுதிகளாக அறிவித்து அப்பகுதி விவசாயிகளுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்

Jeni

பிரபாஸின் ’ஆதிபுருஷ்’ பட ட்ரெய்லர் வெளியானது…!

Jeni

ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பத்தை சேர்க்க வலியுறுத்தல்

Halley Karthik