கன்னியாகுமரி அருகே சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்பனைச் செய்த, டிராவல் ஏஜென்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தேரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகளை முன்பதிவுச் செய்து கொடுக்கும், ஆன்லைன் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் ரமேஷ் சட்டவிரோதமாக, டிக்கெட்டுகளை விற்பனைச் செய்து வருவதாக, ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில், ரமேஷ் போலியான ரயில்வே கணக்குகளை உருவாக்கி, அதன்மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







