முக்கியச் செய்திகள் தமிழகம்

நான்கு நாள் சுற்றுப்பயணம்; தமிழ்நாடு வந்தடைந்தார் மோகன் பகவத்

நான்கு நாட்கள் சுற்றுப் பயணமாக விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத்

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் இருந்து அவர் செல்லும் டிவிஎஸ் நகர் வரை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர் .

இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள ஆர் எஸ் எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் வருகையை முன்னிட்டு மதுரை காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு )தங்கதுரை தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

மேலும் மதுரை விமான நிலையத்தை சுற்றிலும் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்பட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மூலம் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஒன்பது பத்து மணி அளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

Advertisement:

Related posts

மக்களை காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக ஈடுபட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Halley karthi

மதுரையில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை!

Jeba Arul Robinson

காங்கிரஸ் ஆட்சி செய்த போது தான் நீட் கொண்டு வரப்பட்டது: முதல்வர்

Niruban Chakkaaravarthi