முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்மார்ட் சிட்டி பணிகளை அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்து நிலையம், டவுன் ஹால், கலையரங்கம் உள்ளிட்ட பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன. இதனை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சாமிநாதன், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

Advertisement:

Related posts

லாபத்தை அள்ளும் ஹிமாச்சல் செரி!

Vandhana

முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு!

Vandhana

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை; கணவன் உட்பட 3 பேர் கைது!

Halley karthi