முக்கியச் செய்திகள் தமிழகம்

12-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு

12-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தேர்வு என தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “12-ஆம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்தி இல்லாதோருக்கான விருப்பத் தேர்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடத்தப்படும். தேர்வு எழுத விரும்புவோர் நாளை முதல் வரும் 27-ஆம் தேதி வரை மாவட்டங்களில் உள்ள தேர்வுத்துறை உதவி இயக்குநரகங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.” என தெரிவித்துள்ளது.

மேலும், “விருப்பத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுத வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.” என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு 10 மற்றும், +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

கொரோனா தொற்றால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாதிப்பு!

Halley karthi

இலங்கை அகதிகளுக்கு கொரோனா நிவாரண உதவி: அரசு உத்தரவு!

Vandhana

யூரோ கோப்பை கால்பந்து தொடர்: ரஷ்யா, வேல்ஸ், இத்தாலி அணிகள் அபார வெற்றி!

Vandhana