முக்கியச் செய்திகள் இந்தியா

மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று முதல் காய்ச்சல் இருந்ததையடுத்து இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவருக்கு தேவையான ஊட்டச்சத்து திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 89 வயதாக மன்மோகன் சிங் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் 47 காவலர்கள் கொரோனாவால் உயிரிழப்பு!

Halley karthi

பாஜக எம்.பி. ராம் சுவரூப் தூக்கிட்டு தற்கொலை!

Gayathri Venkatesan

திமுக கூட்டணியில் அதிக இடங்கள் கேட்போம்: கே.எஸ்.அழகிரி தகவல்!

Ezhilarasan