முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

விபத்தில் மாடல்கள் பலியான சம்பவம்: ஓட்டல் உரிமையாளர் திடீர் கைது

கேரளாவில் பிரபல மாடல்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில், பார்ட்டி நடந்த ஓட்டல் உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவின் பிரபல மாடல்கள் ஆன்சி கபீர் (26), அஞ்சனா சாஜன் (24). ஆன்சி கபீர் கடந்த 2019 ஆம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் வென்றவர். அந்த ஆண்டு அவரிடம் பட்டத்தை இழந்தவர் அஞ்சனா சாஜன் . இருவரும் தோழிகள். ஆன்சி கபீர் திருவனந்தபுரம் அருகிலுள்ள ஆற்றங்கல்லை சேர்ந்தவர். அஞ்சனா திருச்சூரைச் சேர்ந்தவர். இவர்களின் நண்பர்கள் முகமது ஆசிஷ் (25), டிரைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் ஒரு சொகுசு காரில் சென்றபோது கொச்சி அருகே விபத்தில் சிக்கினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விபத்தில், ஆன்சி கபீர், அஞ்சனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். முகமது ஆசிஷும் டிரைவர் அப்துல் ரஹ்மான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முகமது ஆசிஷ் உயிரிழந்தார். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்ற ரஹ்மான், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததுதான் காரணம் என்று கூறப் பட்டது. பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்

இந்த வழக்கை விசாரித்த போலீசாருக்கு திடுக் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இவர்களுடன் சேர்ந்து ஆறுபேர் கொச்சியில் உள்ள நம்பர் 18 என்ற ஓட்டலில் நடந்த பார்ட்டியில் கலந்துகொண்டனர். அப்போது அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கிளம்பியுள்ளனர். மாடல்கள் வந்த காரை, இன்னொரு சொகுசு கார் பின்னால் தொடர்ந்து வந்துள்ளது. அந்த காரை சைஜு தங்கச்சன் என்பவர் ஓட்டி வந்துள் ளார்.

மாடல்கள் வந்த கார் விபத்தில் சிக்கியதும் பின்னால் வந்த காரில் இருந்தவர்கள், நம்பர் 18 ஓட்டல் உரிமையாளர், ராய் ஜோசப் வயலட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் எதற்காக மாடல்களைப் பின் தொடர்ந்து வந்தார்கள் என்பதும் ஓட்டல் உரிமையாளருக்கு ஏன் தகவல் தெரிவித்தார் என்பதும் மர்மமாக உள்ளது.

இதையடுத்து பார்ட்டியில் கலந்துகொண்டவர்களை அழைத்த போலீசார் விசாரணை நடத்தினர். பார்ட்டி நடந்த போது எடுக்கப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஓட்டல் உரிமையாளர் ராய் ஜோசப் அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனால் அவரையும் ஓட்டல் பணியாளர்கள் 5 பேரையும் கைது செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த வழக்கை பிஜி ஜார்ஜ் தலைமையிலான கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே மாடல்களை பின் தொடர்ந்து வந்த காரை ஓட்டி வந்த சைஜு தங்கச்சன் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனால், இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மேலும் பல மர்மங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

லைட் மேன்களின் வாழ்க்கை பாதுகாப்பிற்காக நிதி திரட்டும் ஏ.ஆர் ரகுமான்

Web Editor

அதிமுக சட்ட விதிகளில் அதிரடி மாற்றம்

Halley Karthik

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தாயார் காலமானார்

Gayathri Venkatesan