கார் விபத்து: பிரபல மாடல்கள் பரிதாப பலி

கார் விபத்தில் பிரபல இளம் மாடல்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பிரபல இளம் மாடல்கள் ஆன்சி கபீர் (26) மற்றும் அஞ்சனா சாஜன் (24). ஆன்சி கபீர் கடந்த 2019…

கார் விபத்தில் பிரபல இளம் மாடல்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பிரபல இளம் மாடல்கள் ஆன்சி கபீர் (26) மற்றும் அஞ்சனா சாஜன் (24). ஆன்சி கபீர் கடந்த 2019 ஆம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டத்தை வென்றவர். அந்த ஆண்டு அவரிடம் பட்டத்தை இழந்தவர் அஞ்சனா சாஜன் . இருவரும் தோழிகள். ஆன்சி கபீர் திருவனந்தபுரம் அருகிலுள்ள ஆற்றங்கல்லை சேர்ந்தவர். அஞ்சனா திருச்சூரை சேர்ந்தவர்.

இவர்கள் உட்பட 4 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழை திருவனந்தபுரத்தில் மாடலிங் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். பின்னர் அன்றிரவு காரில் கொச்சி புறப்பட்டனர். நேற்று அதிகாலை, எர்ணாகுளம் புறவழிச் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க, டிரைவர் காரை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி நொறுங்கியது.

இதில் ஆன்சி கபீர், அஞ்சனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந் தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் ழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.