முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் சோதனை: ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரொக்கம், தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி,தான் அமைச்சராக பணியாற்றிய 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் கிராமப்புறங்களில் ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக கூறப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

அதில் அவர் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பத்தங்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்து தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்த பணி வழங்கியதாக கூறப்பட்டது. இதனால் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரனையின் அடிப்படையில் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 9 தனிநபர்கள்,நிறுவனங்கள் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 9 இடங்களிலும், கோயம்பத்துரில் 4 இடங்களிலும், திருச்சியில் 2 இடங்களிலும், திருவள்ளுர் மற்றும் செங்கல்பட்டில் 3 இடங்களிலும், என மொத்தம் 31 இடங்களில் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கமும், 1228 கிராம் தங்க நகைகளும், 948 கிராம் வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டன. இவ்வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் மற்றும் 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விவசாயத்தை காக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: நடிகர் சிவக்குமார்.

Halley Karthik

உடமைகளை பயணிகளின் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யும் இண்டிகோ நிறுவனம்!

Gayathri Venkatesan

தமிழ்நாட்டில் மேலும் 29 பேருக்கு ஒமிக்ரான் தொற்று

G SaravanaKumar