அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சோதனை-முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் குற்றச்சாட்டு

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் என்னிடம் இருந்து இரண்டு கைபேசியை மட்டுமே கைப்பற்றினர் என்று முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார். வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கியது தொடர்பாக, சென்னை உட்பட…

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் என்னிடம் இருந்து இரண்டு கைபேசியை மட்டுமே கைப்பற்றினர் என்று முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கியது தொடர்பாக, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்ட நிலையில், சென்னை அடையற்றில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

இது மாதிரியான சோதனை நடைபெறும் காலங்களில் இதனை எல்லாம் எதிர்கொள்ளக்கூடிய நல்ல மன வலிமையை எங்கள் அம்மா கற்றுக் கொடுத்துள்ளார்.
அதனால் மகிழ்ச்சியோடு இந்த சோதனையை எதிர்கொண்டு இருக்கிறோம்.

காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனையில் நான் குடியிருப்பது அடுக்குமாடி குடியிருப்பு 3 அறைகள் ஒரு ஹால் என 2 ஆயிரம் ஸ்கொயர் பீட் இதில் 12 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர்.

ஒரு முழுமையான திமுகவின் அரசு எந்திரத்தை எத்தனையோ பிரச்னைகள் இருந்தும் தனி நபர் மீது கொண்ட காட்டத்தால் காழ்ப்புணர்ச்சி உச்சகட்டத்தின் பிரதிபலிப்பாக இந்த சோதனையை நான் கருதுகிறேன்.

என்னிடமிருந்து 120-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களின் வாயிலாக தெரிந்து கொண்டேன் ஆனால் என்னிடமிருந்து என்னுடைய கைப்பேசி ஒன்றும் வீட்டின் கைபேசி என இரண்டு கைபேசிகளை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளனர்.
என்னுடைய ஆதார் கார்டு மனைவியின் ஆதார் கார்டு பிள்ளையின் ஆதார் கார்டு மாமாவின் ஆதார் கார்டு அப்பாவின் ஆதார் கார்டு ஓட்டுனர் உரிமம் என மிக முக்கியமான ஆவணங்கள் கடுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது.

அவர்கள் சோதனை முடிந்து கிளம்பும்போது கூட என் என் பிள்ளை அடுத்த முறை எப்போது வருவீர்கள் என்று கேட்டார் என கிண்டல் அடித்தார். நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அரசுக்கு எவ்வளவோ பணிகள் இருந்தும் அரசு எந்திரங்களை இப்படி பயன்படுத்துவது மிகவும் கவலையாக உள்ளது. உற்றார் உறவினர்கள் நண்பர்கள் கழக நிர்வாகிகள் எங்களுக்கும் குடும்பம் உள்ளது.

ஒரு அரசு மருத்துவக் கல்லூரிக்கு என்ன விதிமுறைகளை பின்பற்றி இருக்கிறோமோ அதே விதிமுறையை பின்பற்றி நாங்கள் No objection certificate கொடுத்துள்ளோம்.

எங்களுக்கு மருத்துவக் கல்லூரி தொடங்குவதில் ஆட்சேபணை இல்லை. யார் தொடங்கினாலும் இது அடங்கும். நான் சொல்வது வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கும் பொருந்தும், அரசு மருத்துவக் கல்லூரிக்கும் பொருந்தும்.

11 அரசு மருத்துவக் கல்லூரிக்கும் சான்றிதழ் வழங்கியுள்ளோம். அதற்கும் வழக்கு பதிவு செய்யலாம் நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம் என்றார் விஜய பாஸ்கர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.