மருத்துவத் துறையில் பணிபுரிபவர்கள் தவறிழைத்தால் நடவடிக்கை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

மருத்துவ தொழில் புனிதமான தொழில்; அதில் பணிபுரிபவர்கள் யாராக இருந்தாலும் தவறு செய்யும் பச்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படு என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்தார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் புதிய ஆரம்ப…

மருத்துவ தொழில் புனிதமான தொழில்; அதில் பணிபுரிபவர்கள் யாராக இருந்தாலும்
தவறு செய்யும் பச்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படு என மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்தார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை
சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 4 கோடியே 23 லட்ச ரூபாய் மதிப்பிலான 11 புதிய
கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்
திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை
சந்தித்தபோது கூறியதாவது:

மருத்துவத் துறையில் பணி இடங்கள் நிரப்படுவது, எம்.ஆர்.பி மூலம் பணியில்
அமர்த்தப்பட்டவர்கள் பணி நிரந்தம் செய்வது உறுதியானது. ஒப்பந்த முறையில்
பணிக்கு அமர்த்தப்படுவர்கள் பணி நிரந்தம் செய்வது என்பது இயலாது காரியம்.
அதில் தரம் பிரித்து ஒவ்வொரு துறையின் சார்பிலும் எத்தனை பணியார்கள்
எந்த எந்த பிரிவின் கீழ் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக இருக்கிறார்கள்
என பட்டியல் தயாரித்து அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான பணி நடைபெற்று
வருகிறது.

புதிய பணியிடங்களை பொறுத்தவரை 4 ஆயிரத்து 308 பணியிடங்கள்
புதிதாக நிரப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அறிவித்தது போன்று
மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட பணிகளுக்க 237 பேருக்கு கடந்த 15
நாட்களுக்கு முன் பணி வழங்கப்பட்டது. அக்டோபர் மாதம் இறுதிக்குள் 4 ஆயிரத்து
308 பணி இடங்கள் முழுமையாக நிரப்பப்படும். மக்களை தேடி மருத்துவ திட்டம்
தமிழகத்தில் இதுவரை 88 லட்சத்து 33 ஆயித்து 88 பேருக்கு முதல் தவனை
வழங்கப்பட்டது.

தமிழக அரசு பொது மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க மக்களை தேடி மருத்துவம்
உட்பட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தர்மபுரி அரசு
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தேவையான புதிய கட்டங்களை வழங்கியுள்ளது.

மேலும், இன்று காலை பாலக்கோடு பகுதியில் தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்
பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், 4 கோடியே
88 லட்ச ரூபாய் மதிப்பில் இன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார
நிலைய கட்டங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் மாணவிக்கு பேராசிரியர் சதீஸ்குமார் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ தொழில் புனிதமான தொழில் அதில் பணிபுரிபவர்கள் யாராக இருந்தாலும் தவறு செய்யும் பச்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சதீஸ்குமார் மீது மேலும் யாராவது புகார் கொடுக்க முன்வந்தால் அவர்களை ரகசியம் காக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.