முக்கியச் செய்திகள் தமிழகம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்ஜாமீன் கோரிய மனுவை ஸ்ரீவில்லி புத்தூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த மாதம் 24 ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது தொடர்பாக, சாத்தூரில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த மோத லில் அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, ராமகிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் வீரா ரெட்டி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முன்னாள் அதிமுக அமைச்சர் உட்பட 5 பேர் மீது சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதுதொடர்பான வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என்பதற்காக, கே டி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

விசாரணையின்போது கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) தனசேகரன், அமைச்சரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement:
SHARE

Related posts

அரசு பாடநூல் கழகத் தலைவராக பொறுப்பேற்றார் திண்டுக்கல் லியோனி

Saravana Kumar

மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 1.24 கோடியாக உயர்வு!

Halley karthi

4 மாதங்களுக்கு பின் பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்கள்

Jeba Arul Robinson