முக்கியச் செய்திகள் தமிழகம்

கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா

உலக புகழ் பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சிகள் யூ-டியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழாவுக்கு அடுத்த படியாக இங்குதான் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். ஆனால் கொரோனா பெரும் தொற்று காரணமாக இந்த ஆண்டும், கடந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 15-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.

வழக்கமாக கடற்கரையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கடற்கரைக்கு பதிலாக கோவில் முன்பு நடைபெற்றது. இதுபோலவே இந்த ஆண்டும் கோவில் முன்பு நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அக். 7 மற்றும் 11 முதல் 14-ம் தேதி வரை மட்டுமே கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி காவல்துறை தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

வலிமையுடன் மோத உள்ள ஆர்.ஆர்.ஆர்?

Saravana Kumar

“தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Halley karthi

கிரெட்டா துன்பெர்க் சிலையை நிறுவிய பல்கலைக்கழகம்: கோபமுற்ற மாணவர்கள்!

Saravana Kumar